2025 ஆம் ஆண்டின் ஒக்டோபர் மாதத்தில் 165,193 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் மாதத்தில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 48,113 ஆகும்.
அத்துடன் ஒக்டோபர் மாதத்தில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 12,934 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 11,496 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 10,864 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 9,753 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 7,903 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
அதன்படி இவ்வாண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 18 இலட்சத்து 90 ஆயிரத்து 687 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.


















