-க.சபேஷன்-
யாழ்.கலட்டி பகுதியில் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் கலட்டிச் சந்திக்கு அருகில் வைத்து சந்தேகநகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேகநபர் கோப்பாய் பகுதியைச் சேர்ந்தவர் எனவும், சந்தேகநபர் போதைப் பொருளை தனது உடமையில் வைத்திருந்ததாகவும், கூறியுள்ள பொலிஸார் விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.


















