வனவாசலைக்கும், களனிக்கும் இடையிலான ரயில் கடவையில் நேற்று புதன்கிழமை பிற்பகல் கார் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் காரின் சாரதி படுகாயமடைந்துள்ளார்.
குறித்த விபத்து நடந்த நேரத்தில் காரில் ஒருவர் மட்டுமே இருந்தாகவும், அவர் ரயில் சிக்னல்களைக் கவனிக்காமல் பயணித்ததால் அனர்த்தம் நேர்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் ரயிலில் மோதியதில் கார் கடவையிலிருந்து சுமார் 200 மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதாகவும், பலத்த காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படகின்றது.
இந்த விபத்தையடுத்து பிரதான பாதையில் ரயில் நடவடிக்கைகளை பாதித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.


















