-சொ.வர்ணன்-
வீட்டிலிருந்து வெளியில் சென்ற தமது பிள்ளையைக் காணவில்லை என பெற்றோர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பெற்றோர் குறிப்பிடுகையில், வீட்டிலிருந்து வெளியில் சென்றிருந்த தமது பிள்ளை வீடு திரும்பவில்லை எனவும், அவரை யாரும் கடத்திச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.
இது குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை தொடர்பு கொண்டு கேட்டபோது பெண் பிள்ளையை காணவில்லை என பெற்றோர் முறைப்பாடு வழங்கியுள்ளனர். அது குறித்து விசாரித்து வருகிறோம் என்றார்.


















