-கஜிந்தன்-
யாழ்.அரசடிப் பகுதியில் 2 கிராம் 250 மில்லிகிராம் ஹெரோயினுடன் கொழும்பைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக போதைப் பொருள் தடுப்பு பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான சந்தேக நபரிடமிருந்து 2 கிராம் 250 மில்லிகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது,
விசாரணைகளின் பின்னர், சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


















