-இ.கலைஅமுதன்-
யாழ்ப்பாணத்தில் கூரிய ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2 நாட்களில் யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையில் மேற்படி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கூரிய ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்களும், பகுதி பகுதியாக போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த 7 பேருமாக, 9 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான சந்தேகநபர்கள் விசாரணையின் பின் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


















