தென்னிந்தியத் திரையுலகின் பிரபல நட்சத்திர நடிகரான சரத்குமார், இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்குடன் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
நடிகர் சரத்குமார் புதன்கிழமை காலை 11.05 மணிக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நான்கு நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் நடிகர் சரத்குமார், நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு செல்லவுள்ளார்.
நாட்டின் முதல் 7 நட்சத்திர ஹோட்டல் என அறியப்படும், கண்டி, தெல்தெனிய, உடிஸ்பத்துவ பிரதேசத்தில் அமைந்துள்ள அவியானா சிலோன் ரிசார்ட்டுக்கு அவர் விஜயம் செய்ய உள்ளார்.
இதைத் தவிர்த்து, அவர் கொழும்பு, காலி போன்ற முக்கியப் பிரதேசங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.


















