வடக்கு – கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2500 வீடுகளை அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதி 5000 மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
2026ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி மேற்படி தகவலை வெளிப்படுத்தியுள்ளார். இதன்படி வடக்கு – கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள, வீடற்ற மக்களுக்காக 2500 வீடுகளை அமைப்பதற்காக தற்போது ஒதுக்கப்பட்டுள்ள சுமார் 3850 மில்லியன் ரூபாய் நிதியை 2026 வரவு செலவுத் திட்டத்தில் 5000 மில்லியனாக, அதிகரிக்கப்படுகிறது.


















