பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை விபத்துக்களை தடுப்பதற்கு கடவைக் காப்பாளர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்க 2026ம் ஆண்டுக்கான பாதீட்டில் 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஜனாதிபதியின் 2026ம் ஆண்டுக்கான பாதீட்டு உரையில் கூறப்பட்டுள்ளதாவது, பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள் காரணமாக வருடாந்தம் குறிப்பிடத்தக்க தொகையிலான உயிரிழப்புகள் ஏற்படும் அதேவேளை அவற்றினால் நிரந்தர அங்கவீனத்திற்கு ஆளாகின்றவர்களும் குறிப்பிடத்தக்க அளவினராகும்.
இந்நிலைமைக்கு தீர்வாக தற்போது சுமார் 1,000 கடவைக் காப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தற்போது எட்டு மணி நேர கடமை நேரத்திற்கு வழங்கப்படும்.
மாதத்திற்கு ரூபா 7,500 குறைந்தபட்ச கொடுப்பனவை ரூபா 15,000 வரை அதிகரித்து வழங்குவதற்கு ரூபா 250 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நாம் முன்மொழிகின்றோம்.


















