அங்குருவாத்தொட்டை – வத்துகொட பகுதியில் உள்ள கடையொன்றில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அங்குருவாதொட்டை – உடுவர பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் மூக்கிலிருந்து இரத்தம் வழிந்ததால், சந்தேகத்திற்கிடமான மரணமாகக் கருதப்படுவதால், நீதவான் விசாரணைக்குப் பின்னர், பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் ஹொரணை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அங்குருவாத்தொட்டை பொலிஸார், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


















