தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசாமாணிக்கம் சாணக்கியனின் தந்தை, வைத்தியர் Dr. இராஜபுத்திரன் இராசாமாணிக்கம் அவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இறைவனடி சேர்ந்தார்.
இவர் உயிரிழக்கும் போது அவருக்கு வயது 67 ஆகும்.
அன்னாரின் திருவுடல் இன்று சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் பொரளை Jayaratne Respect Home – இல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், அன்னாரின் திருவுடல் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் பொரளை பொது மயானத்தில் எரியூட்டப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


















