-ஞானத்தமிழ்-
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் வடக்கு மாகாணத் தொழில்துறைத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடாத்தும் வர்த்தக சந்தை இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு தம்பகாமம் மாதிரிக்கிராமத்திற்குரிய பளை தபால் நிலையத்திற்கு அருகாமையில் நடைபெறவுள்ளது.
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் இ.த.ஜெயசீலன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட செயலக பிரதம கணக்காளர் க.சி.கஜேந்திரன் பிரதம விருந்தினராகவும், வடக்கு மாகாண தொழில்துறைத் திணைக்கள மாகாணப் பதில் பணிப்பாளர் திருமதி க.துசியா மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் பதில் உதவிப் பணிப்பாளர் ச.சசீபன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்துகொள்ளவுள்ளனர்.


















