-பா.சதீஸ்-
மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் மதிப்பளித்தல் நிகழ்வு எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை விசுவமடு கிழக்கு புத்தடி பகுதியில் நிகழ்வுக்கான முன்னேற்பாடாக சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.
விசுவமடு கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளைச் சேர்ந்த மாவீரர் பெற்றோர், உரித்துடையோருக்கான இந்நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்றுவரும் நிகழ்வாகும். அதேபோன்று இவ்வருடமும் சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

விசுவமடு கிழக்கு, மேற்கு பிரதேச மாவீரர் பெற்றோர் பணிக்குழுவின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் வே.கரிகாலன், மாவீரர்களின் பெற்றோர், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு பங்களித்திருந்தனர்.


















