-ஞானத்தமிழ்-
மாதகல் நலன்புரிச் சங்கம் பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதி அனுசரணையுடன் நடாத்தும் ‘பசுமையில் மாதகல்’ இலவச மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்ப விழா எதிர்வரும் 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு மாதகல் விக்கினேஸ்வரா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது
மாதகல் நலன்புரிச் சங்கத் தலைவர் சா.அருள்ஞானாந்தன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி பிரதம விருந்தினராகவும் நவாலி கமநல சேவைகள் நிலைய கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ந.மயூரன் சிறப்பு விருந்தினராகவும் மாதகல் ஜே-151 மற்றும் ஜே-152 பிரிவுகளின் கிராம சேவையாளர் க.சுதர்சன் மற்றும் மாதகல் ஜே-150 பிரிவு கிராம சேவையாளர் ப.சுஜீவன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இத்திட்டத்தினூடாக மூன்று கிராம சேவையாளர் பிரிவுகளையும் சேர்ந்த மக்களிற்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு 8 ஆவது வருடமாக நடைபெறவுள்ளது.


















