யாழ்.குடாநாட்டில் காற்று மாசுபாட்டை குறைப்பதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு யாழ்.மாநகரசபை மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகள் 2026 ஜனவரி 22ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
வைத்தியர் உமா சுகி நடராஜா தாக்கல் செய்த மேற்படி மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண் டோ ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மனுதாரர் சார்பாக சட்டத்தரணி ரவீந்திரநாத் தாபரே நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார். 2017 ஆ ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குப்பைகள் மற்றும் கழிவுகளை திறந்த வெ ளியில் எரிப்பதைத் தடைசெய்து வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டதாகவும், அந்த வர்த்தமானி அறிவிப்பின் அடிப்படையில் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான ஒரு திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என்றும் சட்டத்தரணி தாபரே நீதிமன்றத்தில் தெரிவித்தார். உண்மைகளை பரிசீலி த்த அமர்வு, குறித்த திட்டத்தை உருவாக்கும்போது தொடர்புடைய வர்த்தமானி அறிவிப்பில் கவனம் செலுத்துமாறு மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை மற்றும் யாழ்ப்பாண மாநகர சபைக்கு உத்தர விட்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் மனுவை மீளவும் ஜனவரி 22 ஆம் திகதி விசாரணைக்கு எத்துக்கொள்ளவும் உத்தரவிட்டிருந்தது.


















