மக்களின் பணம் வீணடிக்கப்பட்டமைக்கு சான்றாக நாட்டில் சுமார் 2700 அரசாங்க கட்டிடங்கள் பயன்பாடற்ற நிலையில் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து ஜனாதிபதி குறிப்பிட்டிருந்ததாவது, இந்தக் கட்டிடங்கள் கல்விக் கட்டிடங்கள், மருத்துவமனைகள், ஜவுளித் தொழில் கட்டிடங்கள், தொழிற்பயிற்சி மையங்கள், சமூக அரங்குகள், சேவை மையங்கள் மற்றும் பல்நோக்கு கட்டிடங்கள், கிடங்குகள் மற்றும் கலாச்சார மையங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்தக் கட்டிடங்களை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம், மேலும் அவற்றை ஹோட்டல்கள், வணிக மையங்கள், தொழிற்சாலைகள் அல்லது பிற நோக்கங்களுக்காக பொது – தனியார் கூட்டாண்மை மூலம் வருமானம் ஈட்டும் திட்டங்களுக்குப் பயன்படுத்துகிறோம்.
அதன்படி, இந்த வளங்களை திறம்பட பயன்படுத்தத் தேவையான திட்டங்களை நாங்கள் தயாரித்து வருகிறோம், சாத்தியக்கூறு ஆய்வுகள் கூட செய்யாமல் இந்தக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.


















