-த.சுபேசன்-
சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் மீசாலை பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா நிகழ்வுகள் அண்மையில் சாவகச்சேரி பொன்விழா மண்டபத்தில் இடம்பெற்றது.
நகரசபைத் தவிசாளர்,வ. ஸ்ரீபிரகாஸ் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில்
பிரதம விருந்தினராக தென்மராட்சி பிரதேச செயலர் பிரான்சிஸ் சத்தியசோதி, சிறப்பு விருந்தினராக தென்மராட்சி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் செல்வி இ.அபிராமி, கௌரவ விருந்தினர்களாக மீசாலை விக்னேஸ்வரா மகா வித்தியாலய அதிபர் திருமதி சுதாமதி தயாபரன், மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி பிரதி அதிபர் திருமதி கஜேந்தினி மகிந்தன், மீசாலை வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலையின் பதில் அதிபர் கந்தசாமி சத்தியானந்தன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இதன்போது விசேட நிகழ்வாக ‘மாந்துளிர்’ என்ற நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.
அத்துடன் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டது.


















