சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குர்ஆன் பிரதிகளை விரைவாக விடுவித்து 25 இலட்சம் முஸ்லிம்களின் சமய உரிமையை பாதுகாக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் கோரியுள்ளார்.
அத்துடன் புனித குர்ஆன் பிரதிகள் தொடர்பில், ஆராய நியமிக்கப்பட்டிருக்கும் மீளாய்வுக் குழுவின் பரிந்துரைகளை நிராகரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு – செலவுத் திட்டம் மீதான விவாதத்தில், உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
டிஜிட்டல் பொருளாதார நடவடிக்கைக்கு ஜனாதிபதி எடுத்துவரும் நடவடிக்கை பாராட்டத்தக்கதாகும். இதன் மூலம் மக்கள் சேவைகளின் தரம் உயரும்.எனினும்,எமது புனித அல் குர்ஆன் பிரதிகளை இறக்குமதி செய்வதில் இந்த அரசாங்கம் கலியுகத்திலேயே இன்னும் இருக்கிறது.
கியூவ் ஆர்,கோர்ட்டை பயன்படுத்தி அல்குர்ஆன் மொழிபெயர்ப்புகளை தரவிறக்கம் செய்யும் நிலைமை காணப்படுகிறது.
ஆனால் சவூதியிலிருந்து வந்துள்ள புனித அல்குர் பிரதிகள் இன்னும் விடுவிக்கப்படாமல் சுங்கத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையிலேயே டிஜிட்டல் துறை முன்னேற்றம் தொடர்பில் நாம், பேசிக்கொண்டிருக்கிறோம் என்றார்.


















