-அமைச்சர் பிமல் ரத்நாயக்க கண்டுபிடிப்பு-
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை சேர்ந்த சில தலைவர்கள் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார்கள் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன் போது மேலும் அவர் கூறுகையில்,
வடக்கு, கிழக்கில் போதைப் பொருட்கள் விநியோகத்தில் பொலிஸாரும், இராணுவத்தினருமே சம்பந்தப்பட்டுள்ளதாக கஜேந்திரகுமார் எம்.பி கூறினார்.
போதைப் பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் சிலர் இருப்பதாகவும், நீதித்துறையிலும் சிலர் இருக்கலாம் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
வடக்கை போன்று தெற்கிலும் போதைப் பொருட்கள் பிடிக்கப்படுகின்றது. இந்நிலையில் கஜேந்திரகுமார் போன்றோர் குறைந்தது இவ்வாறான பிரச்சினைகளில் வடக்கு, தெற்கை இணைக்க முடியாதவர்களாக இருக்கின்றனர். அவர்கள் தேசிய ஒற்றுமைக்கு பயப்ப டுகின்றார்கள். அவர்களின் அரசியல் இனவாதத்திலேயே தங்கியுள்ளது.
போதைப் பொருள் பிரச்சினையில் வடக்கையும் தெற்கையும் இணைக்க முடியாதென்றால் வேறு எதனை செய்ய முடியும். வடக்கு யுத்தத்தில் பாதிக்கப்பட்டு, கேரள கஞ்சாவிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் வடக்கில் போதைப் பொருள் குறைவாக இருந்ததாக கஜேந்திரகுமார் எம்.பி குறிப்பிட்டார். ஏன் அவ்வாறு குறைவாக இருந்தது என்றால்
யுத்த காலத்தில் இந்திய படகுகள் வரவில்லை. இதனாலேயே அப்போது போதைப் பொருட்களை கொ ண்டுவரவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்கள் சிலர் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டனர் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமே. அவர்க ளின் இயக்க நடவடிக்கைகளுக்காக அவர்கள் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டனர் என்றார்.


















