ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஏற்பாட்டில் மாகாண சபை முறையும் அதிகார பகிர்வும் என்னும் தலைப்பிலான கருத்தரங்கு அண்மையில் மன்னார் நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது .
இக்கருத்தரங்கில் ‘மாகாண சபையும் வரலாற்றுத் தருணங்களும்’ என்னும் தலைப்பில் சுயாதீன ஊடகவியலாளர் கருணாகரன், ‘உள்ளூர் ஆட்சி மீதான மாகாண சபையின் அதிகாரங்களும் வரையறைகளும்’ என்னும் தலைப்பில் சட்டத்தரணி சவிரியப்பு டெலிமா சந்திரபோஸ் ‘மாகாணங்களுக்கு பகிரப்பட்ட அதிகாரங்கள் மற்றும் கல்வி’ என்னும் தலைப்பில் வடக்கு மாகாண சபையின ;முன்னாள் கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன், ‘நிலையான தீர்வு எட்டுவதற்கான படிக்கல்லாக மாகாண சபை’என்னும் தலைப்பில் யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கோசலை மதன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு மாகாண சபை முறைமைகள் தொடர்பில் தெளிவுபடுத்தினர்.
குறித்த கருத்தரங்கில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.பாரூக், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன், சமத்துவக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


















