-கஜிந்தன், சி.ஜெகதீஸ்வரன்-
துவிச்சக்கரவண்டியில் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் கேணியடி வட்டுக்கோட்டைப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது வட்டுக்கோட்டை வடக்கு சித்தங்கேணியைச் சேர்ந்த கணேசமூர்த்தி நாகேந்திரம் (வயது-68) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார். சாட்சிகளை வட்டுக்கோட்டை பொலிஸார் நெறிப்படுத்தினர்.


















