சீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப இசை நிகழ்ச்சியின் இறுதி சுற்றில் இலங்கை பாடகர் சுகிர்தராஜா சபேசன் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார்.
சரிகமப சீனியர் ஐந்தாம் சீசனின் இறுதி சுற்று நேற்று இடம்பெற்றது.
இந்நிலையில் இறுதி சுற்றுக்கு இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் விநாயகபுரத்தைச் சேர்ந்த பாடகரான சுகிர்தராஜா சபேசனும் தெரிவு செய்யப்பட்டிருந்தார். தற்போது அவர் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். சபேசனுக்கு 10 லட்சம் ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அவருக்கு சமூக ஊடகங்களில் அனைத்து இலங்கை வாழ் மக்களும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்த சீசனின் வெற்றியாளராக, மக்கள் அளித்த வாக்குகள் அடிப்படையில் சுசாந்திகா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு 60 லட்சம் ரூபா மதிப்புள்ள புதிய வீடு பரிசாக வழங்கப்பட்டது.
மூன்றாம் இடத்தை பெற்ற சின்னு செந்தமிழனுக்கு 3 லட்சம் ரூபா மதிப்புள்ள தங்கம் பரிசாக வழங்கப்பட்டது.
இதேவேளை கோல்டன் வாய்ஸ் என மக்களால் தேர்வு செய்யப்பட்ட பவித்ராவுக்கு 5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பரிசாக வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


















