-செ.ரவிசாந்-
மாவீரர் நாளை முன்னிட்டு ஏழாலையூர் நண்பர்களின் ஏற்பாட்டிலான இரத்ததான முகாம் நிகழ்வு நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஏழாலை உதயசூரியன் சனசமூக நிலைய மண்டபத்தில் முன்னெடுக்கப்பட்டது.
மேற்படி இரத்ததான முகாம் நிகழ்வில் ஏழாலையைச் சேர்ந்த 21 பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குருதிக் கொடை வழங்கி உயிர்காக்கும் உன்னத இரத்ததானப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.
இதேவேளை, மாவீரர் நாளை முன்னிட்டு ஏழாலையூர் நண்பர்கள் இணைந்து கடந்த பல வருட காலமாகத் தொடர்ச்சியாக இரத்ததான முகாம் நிகழ்வை ஏற்பாடு செய்து நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.















