கரவெட்டி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கலாசார மத்திய நிலையத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான பயிற்சி நெறிகளான நாடகமும் அரங்கியலும், வயலின், மிருதங்கம் ஆகிய பாடநெறிகளை கற்பிப்பதற்கான ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
ஆர்வமுள்ளவர்கள் தங்கள் சுயவிபரக் கோவையை 2025.12.05 ஆம் திகதிக்கு முன்பாக கலாசார மத்திய நிலையம் 15 ஆம் கட்டை, உடுப்பிட்டி தெற்கு, உடுப்பிட்டி என்னும் முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ சமர்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
















