அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமாக பிரபாத் சந்திரகீர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்நியமனத்தை வழங்கியுள்ளார்.
அத்தியாவசிய சேவைகளை வழங்குதல் மற்றும் ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட சகல நடவடிக்கைகளையும் செயல்படுத்துதல் மற்றும் அவசர உதவிகளுக்கு ஒத்துழைத்தல் என்பன இவரது பொறுப்புக்களாக்கப்பட்டுள்ளன.
பிரபாத் சந்திரகீர்த்தி தற்போது பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளராக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


















