-த.சுபேசன்-
தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கோவிற்குடியிருப்பு கிராமத்தின் உதயசூரியன், மகிழங்கேணி பகுதிகளில் வசித்த மக்கள் கடல் பெருக்கு மற்றும் மழை வெள்ளம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
64 குடும்பங்களைச் சேர்ந்த 192 அங்கத்தவர்கள் மேற்படி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு அருகில் உள்ள பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை பிரதேச செயலகம், கிராம அபிவிருத்திச் சங்கம், சாவகச்சேரி நகரசபை,சாவகச்சேரி பொலிஸ் நிலையம், இராணுவம், வர்த்தக சங்கம் ஆகியன இணைந்து பூர்த்தி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


















