கண்டி மாநகர சபை ஊழியர்கள் சிலர் கடந்த காலங்களில் அதிகளவு இலஞ்சம் பெற்று ஊழல் நடவடிக்கைகளில் அதிகம் ஈடுபட்டதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. எனவே அப்படியானவர்கள் எதிர்காலத்தில் நேர்மையாக கடமைபுரிய முன்வரவேண்டும் என கண்டி மேயர் சந்திரசிரி விஜேநாயக்க தெரவித்தார்.
கண்டி டெவோன் ஹோட்டலில் இடம் பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் ஒரு பெண் தனது வீட்டுக்கு ஆதன வரி இலக்கம் ஒன்றைப் பெற்றுக் கொள்ள இலஞ்சமாக குறிப்பிட்ட ஒரு தொகைப் பணத்தை ஊழியர் ஒருவர் கோரியதாக முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். இப்படியான படு மோசமான விடயங்களில் ஊழியர்கள் இதன் பிறகு ஈடுபடக் கூடாது.
மேலும் சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக அப் பெண் மேற்படி விடயமாக அலைந்து திரிந்ததாக தெரிவித்துள்ளார். இது போன்ற விடயங்கள் காத்திரமானதல்ல என்றார்.


















