இலங்கை விமானப்படையின் பெல் 212 ஹெலிகொப்டரின் தலைமை விமானியான விங் கமாண்டர் நிர்மல சியம்பலாபிட்டிய லுனுவில பகுதியில் விமானத்தை அவசரமாக தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானதில் மரணமடைந்தார்.
அவரது சிறப்பான சேவையை அங்கீகரிக்கும் விதமாக, 2025 நவம்பர் 30 முதல் விங் கமாண்டர் பதவிநிலையில் இலிருந்து குரூப் கப்டன் பதவி நிலைக்கு பதவி உயர்த்தப்பட்டார்.
அவரது உடல் நேற்று லுனுவில இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிச் சடங்குகள் விமானப்படையின் முழு மரியாதையுடன் எதிர்வரும் 2025 டிசம்பர் 4 ஆம் திகதி நடைபெறவுள்ளது.


















