-த.சுபேசன்-
கனமழையால் பாதிக்கப்பட்ட சாவகச்சேரியின் மகிழங்கேணி மற்றும் உதயசூரியன் கிராம மக்களுக்கு சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றம் ஊடாக அத்தியவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.
மேற்படி பகுதி மக்கள் வெள்ளத்தால் தமது வீடுகளில் இருந்து வெளியேறி அருகில் உள்ள பாடசாலையில் தஞ்சமடைந்துள்ள நிலையில் சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத் தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் நேரடியாக விஜயம் செய்து வர்த்தகர்களிடம் சேகரித்த அத்தியவசியப் பொருட்களை வழங்கினர்.
















