யாழ்ப்பாணம் ஆவரங்காலை சேர்ந்த பிரபல மாடல் ஹரண் ரமின்ஷன், 2025 ஆம் ஆண்டு நவம்பர் 28 பிலிப்பைன்ஸ் – மனிலாவில் நடைபெற்ற மிஸ்டர் கிளாம் இன்டர்நேஷனல் உலகளாவிய மாடலிங் போட்டியில் பங்களாதேஷ் பிரதிநிதியாக பங்கேற்று, சிறப்பான சாதனையைப் படைத்துள்ளார்.
உலகம் முழுவதிலிருந்து 35க்கும் மேற்பட்ட நாடுகளின் போட்டியாளர்கள் பங்கேற்ற இப்போட்டியில், கடும் போட்டிகளின் மத்தியில் ஹரண் ரமின்ஷன் TOP – 10 தரவரிசைக்குள் இடம்பிடித்து, இரண்டு பதக்கங்களையும் வென்று யாழ். மண்ணை பெருமைப்படுத்தியுள்ளார்.

இவரே யாழ்ப்பாணத்திலிருந்து முதன் முதலாக குறித்த போட்டியில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
















