-ஜனாதிபதி அநுர பாராளுமன்றில் உருக்கம்-
நாட்டில் இடம்பெற்ற பேரழிவில் நம்மோடு வாழ வேண்டிய மக்கள் மறைந்துள்ளனர். தமது குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் நெருக்கமாக வாழ வேண்டிய மக்களை நாம் இழந்துவிட்டோம்.
சில இடங்களில் ஒட்டுமொத்த கிராமமும் இந்தப் பேரழிவால் அழிந்துள்ளன. ஆனால் எமது நாட்டின மனித நேயத்தை அழிக்க முடியாது என்பதை எமது நாட்டு மக்கள் மீண்டும் ஒருதடவை நிருபித்துள்ளனர்.

















