-செ.கபிலன்-
யாழ்.பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் விரிவுரையாளர் எஸ். சிவகாந்தன் மற்றும் உதவி விரிவுரையாளர்களுடன் இணைந்து, குற்றவியல் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் யாழ்ப்பாண சிறையில் கள ஆய்வொன்றை மேற்கொண்டனர்.
இதன்போது குற்றவியல் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் சிறைச்சாலை சார்ந்த பல்வேறு அம்சங்கள், சிறையின் நோக்கங்கள், கைதிகளுக்கான மறுவாழ்வு திட்டங்கள் உள்ளிட்டவை பற்றி முழுமையான விளக்கமும் வழிகாட்டுதலும் மாணவர்களுக்கு தெளிவாக வழங்கினர்.
















