–கஜிந்தன்-
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் கலைமலர் சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு நாளை புதன்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர் சி. சிறீசற்குணராசா பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு, மலரை வெளியிட்டு வைக்கவுள்ளார். விரிவுரையாளர் வே. சேந்தன் மலர் பற்றிய அறிமுகவுரையை ஆற்றுவார்.
கலாசாலையின் 102 வருடகால வரலாற்றில் வெளிவரும் 49 ஆவது மலர் இது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















