-த.சுபேசன்-
சுன்னாகம் பாரம்பரிய ரோட்டரிக்கழகம் ஊடாக ஆணையிறவுப் பகுதியைச் சேர்ந்த 140 குடும்பங்களுக்கு 15 இலட்சம் ரூபாய் பெறுமதியிலான உதவித்திட்டம் வழங்கிவைக்கப்பட்டது.
இதன்போது, குடும்பம் ஒன்றிற்கு 8000ரூபாய் நிதியுதவி மற்றும் உலருணவுப் பொதி ஆகியன வழங்கிவைக்கப்பட்டன.
சதாசிவம் இரத்தினசிங்கம் குடும்பத்தினரின் நிதிப்பங்களிப்பில் மேற்படி உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
















