-சந்தேக நபர்கள் கைதாகவில்லையாம்-
யாழ்ப்பாணத்தில் கடற்படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது கஞ்சாத் தொகை கைப்பற்றப்பட்டது.
கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 26 கிலோ 900 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மொத்த மதிப்பு 6 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் என தெரிவித்துள்ள என கடற்படையினர், அவற்றை சட்ட நடவடிக்கைக்காக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.















