-இ.கலைஅமுதன்-
யாழ்ப்பாணம் சர்வதேச நிலையத்திற்கு நேற்று திங்கட்கிழமை மாலை மலேசியாவில் இருந்து விமானமொன்று வந்தடைந்தது.
மலேசியாவின் ஜோகூர் பாரு செனாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து எரிபொருள் நிரப்புதல் மற்றும் பணியாளர்கள் ஓய்வுக்காக யாழ்ப்பாணத்தை வந்தடைந்த குறித்த விமானம் இன்று புறப்பட உள்ளது.
2025 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் நடைபெறும் மூன்றாவது சர்வதேச சார்ட்டர் விமான சேவை இதுவாகும் என விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் பிராந்திய விமான இணைப்பை வலுப்படுத்துதல், பொருளாதார வளர்ச்சியை ஆதரித்தல் மற்றும் வடக்கு இலங்கையில் சுற்றுலாவை மேம்படுத்துதல் ஆகியவற்றை தொடர்ந்து செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
















