-சொ.வர்ணன்-
பருத்தித்துறை – இன்பசிட்டி பகுதியில் கடலில் ஆமையை இறைச்சிக்காக எடுத்துச் சென்ற மூன்று பேர் நேற்று திங்கட்கிழமை காங்கேசன்துறை பிராந்திய குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நபர்களை பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்திய நிலையில், அவர்களை தடுப்பு காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், உயிருடன் காணப்பட்ட குறித்த கடலாமையை கடலில் விடுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
















