-தமிழ் தரப்புடனும் பேச்சுவாராம்-
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவு ள்ளதாக தகவலறிந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.
பேரிடருக்குப் பிந்தைய மீட்புத் திட்டத்தில் ஒத்துழைப்புக்கான ஒரு தொகுப்பை அவர் அறிவிப்பார் எ ன்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.
இதேவேளை கொழும்பில் அரசியல் தலைவர்களை சந்தித்துப் பேசவுள்ள ஜெய்சங்கர், தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி (சங்குக் கூட்டணி) ஆகிய
தரப்பினரை ஒன்றாகச் சந்திக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. 23ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட் சியின் தலைவரும், சங்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐந்து கட்சிகளின்
தலைவர்களுமாகச் சேர்ந்து இந்தியத் தூதுவர் சந்தோஷ; ஜாவைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்ய ப்பட்டிருந்தன. ஆயினும் இந்திய வெளிவிவகார அமைச்சரின் வருகையையொட்டி
அந்தச் சந்திப்பு தள்ளிப் போய் இருப்பதாகத் தெரியவருகிறது. மேலும் ஜே.வி.பியின் பொதுச் செய லாளர் மாத இறுதியில் புதுடில்லி செல்லவுள்ளதாக கூறப்படும் நிலையில்,
அதற்கு முன்னதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் கொழும்பு வருகை த ந்து இலங்கைத் தலைவர்களைச் சந்தித்துப் பேசவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


















