டித்வா பேரிடரினால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்வதற்கு அரசாங்கம் வழங்கும் 25 ஆயிரம் ரூ பாய் நிவாரணம் மற்றும் 50 ஆயிரம் நிவாரணம் ஆகியவற்றை இம்மாதம் 31ம் திகதிக்கு முன்பதாக வ ழங்கி முடிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.
இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் திட்டத்தின் கீழ் குடிமக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கா ன மாவட்ட அளவிலான திட்டங்களை மறுஆய்வு செய்வதற்கான சிறப்பு கலந்துரையாடல் நேற்று ஜனா திபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது மீள்குடியேற்றத் திட்டங்கள் மற்றும் பொருத்தமான நிலங்களை அடையாளம் காண்பது கு றித்து விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன, முக்கிய மாவட்டங்களுக்கு தனித்தனி வீட்டுத் திட்டத் திட்டங்களைத் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
ஒருங்கிணைந்த செயல்படுத்தலை உறுதி செய்வதற்காக அனைத்து தொடர்புடைய பங்குதாரர்களுடனும் தொடர் ஆலோசனைகள் கூட்டப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். அதிக ஆபத்துள்ள பகுதிகளிலி ருந்து குடிமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக மாற்றுவதன் முக்கியத்துவம்,
வீட்டுவசதி இழப்பீட்டை நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் விநியோகிக்க வேண்டியதன் அவசியத்துடன் வலியுறுத்தப்பட்டது. அதேசமயம் வெள்ளத்தினால் அழிவடைந்த கடவுச்சீட்டு மற்றும் N தசிய அடையாள அட்டை போன்றவற்றை மீள வழங்குவதை துரிதப்படுத்துமாறும்,
ஜனாதிபதி அதிகாரிகளை பணித்துள்ளார்.


















