-சு.பாஸ்கரன்-
கிளிநொச்சிக்கு நேற்று விஜயம் செய்த பிரதமர் ஹரிணி அமரசூரிய இரணைமடு குளத்தின் நிலைமைகளை நேரடியாக பார்வையிட்டார்.
நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்திற்கு வருகைதந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மாவட்டத்தின் பெரிய நீர்ப்பாசன குளமான இரணைமடு குளத்தின் நிலமைகளை பார்வையிட்டதோடு, அனர்த்த நிலமையில் கையாளப்பட்ட நீர் முகாமைத்துவ செயற்பாடுகள் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் நீர்ப்பாசன அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.


















