-பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பங்கேற்பு-
-வி.சரவணன்-
அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பிலான விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமொன்று நேற்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்த அனர்த்த விசேட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் பாதிப்புக்களை சீரமைப்புச் செய்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இக்கூட்டத்தில் வடக் மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் நேரலையில் கலந்து கொண்டிருந்தார்.
மேலும் இக்கலந்துரையாடலில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், பத்மநாதன் சத்தியலிங்கம், உபாலி சமரசிங்க, செல்லத்தம்பி திலகநாதன், செல்வம் அடைக்கலநாதன், மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், வடக்குமாகாண பிரதம செயலாளர் திருமதி. தனுஜா முருகேன், வடக்கு மாகாண திணைக்கள அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


















