-அன்ரனி திலக்-
யாழ்.வடமராட்சி கிழக்கு – கட்டைக்காடு பகுதியில் உள்ள வீடொன்றின் மீது தாக்குதல் நடத்திய கும்பலை கைது செய்ய பொலிஸார் சுற்றிவளைப்பு தேடுதல் நடத்தினர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வன்முறை கும்பல் ஒன்று கட்டைக்காடு கிழக்குப் பகுதியிலுள்ள வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலில் வீட்டில் காணப்பட்ட வாகனங்கள், வீட்டுத் தளபாடங்கள், சி.சி.ரீ.வி கமராக்கள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன.
இந்நிலையில் சி.சி.ரீ.வி ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதன் அடிப்படையில்,
வன்முறை கும்பலை கைது செய்வதற்காக பொலிஸார் நேற்று காலை தொடக்கம் கட்டைக்காடு கிழக்குப் பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல்களை முன்னெடுத்தனர். எனினும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.


















