-கஜிந்தன்-
கட்சியின் பிரதான பொறுப்புக்களில் மாற்றங்களை ஏற்படுத்தி இளையவர்களுக்கு வழிவிடும் வகையில், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் 12வது தேசிய மாநாடு எதிர்வரும் தை 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நடாத்தப்படவுள்ளது.
இந்நிலையில் கட்சி மாநாட்டுக்கு முன்னதாக வடக்கு கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களிலும் 225 பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களை தெரிவு செய்வதற்குமான தெரிவுக் கூட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
அந்த வகையில் நேற்று யாழ். மாவட்ட உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட அமைப்பாளரை தெரிவு செய்யும் கூட்டம் கச்சேரியடிப் பகுதியில் இடம்பெற்றது.
அந்தவகையில் யாழ். மாவட்ட அமைப்பாளராக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சபா குகதாஸ் மாவட்ட செயற்குழு உறுப்பினர்களால் ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டதுடன் பொதுக்குழு உறுப்பினர்களாக 45 பேர் தெரிவாகினர்.


















