முல்லைத்தீவு கல்வி வலய பாடசாலை ஒன்றில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிபர் ஒருவர் ஊழல் – முறைகேடுகளில் ஈடுபட்டதாக கல்வி அமைச்சுக்கு அனுப்பப்பட்ட முறைப்பாட்டு கடிதத்தின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுக்க பிரதமர் அலுவலகம் பணிப்புரை வழங்கியுள்ளது.
முறைப்பாட்டு கடிதத்தை கல்வி அமைச்சுக்கு கையளித்துள்ள பிரதமர் அலுவலகம், மேற்குறித்த அதிபர் அரச சட்டதிட்டங்களை மீறி சமூக ஊடகங்கள் வாயிலாக நிதி திரட்டியதும் மற்றும் பாடசாலையுடன் தொடர்பு இல்லாத பாடசாலையின் பெயரில் இயங்கும் நிதியம் ஒன்றிற்கு நிதி அனுசரணை வழங்குமாறு கோரிய கடிதம் போன்றன குற்றச்சாட்டுகளாக பிரதமர் அலு வலகத்தில் முன்வைக்கப்பட்ட நிலையிலேயே பிரதமர் அலுவலகம் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பணிப்புரை வழங்கியிருக்கின்றது.


















