-வி.சரவணன்-
மன்னார் மாவட்டத்தின் இருவேறு இடங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மக்கள் குறைகேள் சந்திப்புக்களை நடாத்தினார்.
முத்தரிப்புத்துறையிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்திலும், இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்திலும்; மக்கள் குறைகேள் சந்திப்புக்கள் இடம்பெற்றன. இந்த மக்கள் குறைகேள் சந்திப்புக்களில் மக்கள் பலரும் கலந்துகொண்டு தமது கோரிக்கைகளையும், குறைபாடுகளையும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் முன்வைத்தனர்.
மேலும் குறித்த மக்கள் குறைகேள் சந்திப்புக்களின்போது தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்டக் கிளையின் பிரமுகர்கள், நகரசபை மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள் என பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


















