முல்லைத்தீவில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த தனியார் பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இச்சம்பவம் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் இடம்பெற்றது. முல்லைத்தீவில் இருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து மீது சுண்டிக்குளம் சந்திப் பகுதியில் கல்வீச்சு நடத்தப்பட்டது.
இந்நிலையில், குறித்த பேருந்தில் பயணித்தவர்கள் மற்றொரு பேருந்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இச்சம்பவத்தால், பேருந்தின் பின்பகுதி கண்ணாடி சேதமடைந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


















