கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் உள்ள வீடு ஒன்றில் தங்க நகைகள் மற்றும் 60 ஆயிரம் ரூபா பணம் என்பன திருடப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பகல்வேளை வீட்டில் எவரும் இல்லாத நேரத்தில் நுழைந்து பாதுகாப்பாக வைத்திருந்த தங்க நகைகள் மற்றும் பணம் திருடப்பட்டது. இதனையடுத்து, பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, விரைந்து செயற்பட்ட தர்மபுரம் பொலிஸார் கிளிநொச்சியில் வைத்து சந்தேக நபரை கைது செய்தனர்.
36 வயதுடைய ஏழாலை பகுதியைச் சேர்ந்தவரே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து நான்கு மோதிரங்கள், ஒரு தோடு, ஒரு செயின், 41 ஆயிரத்து 860 ருபா பணம் மீட்கப்பட்டது.


















