-வி.சரவணன்-
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பெரிய சாளம்பன் கிராமத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மக்கள் குறைகேள் சந்திப்பொன்றை நடத்தினார்.
இதன்போது, பெரியசாளம்பன் கிராமத்தின் வீதிகளைச் சீரமைத்தல், பொதுநோக்குமண்டபம் அமைத்தல், குடிநீரைப் பெற்றுக்கொள்வதிலுள்ள இடர்பாடுகளைத் தீர்த்தல், முன்பள்ளியிலுள்ள வளப் பற்றாக்குறைகளை சீர்செய்தல், காட்டு யானைகளினால் ஏற்படும் பாதிப்பிற்கு தீர்வு பெற்றுத்தருதல், முத்துமாரி அம்மன் ஆலயத்தின் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கிராம மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில் மக்களின் கோரிக்கைகளை செவிமடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கைகளை எழுத்துமூலமாக தம்மிடம் கைளிக்குமாறு தெரிவித்ததுடன், மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படுமெனவும் தெரிவித்தார்.


















