-பா.பிரதீபன்-
நீர்வேலிப் பகுதியில் கப்ரக வாகனமொன்று விபத்துக்குள்ளாகியதில் பஸ் தரிப்பு நிலையம் முற்றாக சேதமடைந்தது.
யாழ்ப்பாணத்திலிருந்து, பருத்தித்துறை நோக்கிப் பயணித்த குறித்த வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து நீர்வேலி கந்தசுவாமி கோவில் சந்திப் பகுதியிலுள்ள பஸ் தரிப்பு நிலையத்துக்குள் புகுந்து, விபத்துக்குள்ளானது.
இருப்பினும், குறித்த வாகனத்தில் பயணித்தவர்கள் தொடர்பாக எவ்விதத் தகவலும் கிடைக்கவில்லை.
நேற்று காலை வாகனத்தை மீட்ட கோப்பாய் பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


















