-க.சபேஷன்-
யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறப்பான உள்ளக விளையாட்டு அரங்கு ஒன்றை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு அதற்கு நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும், அது தற்போது நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்பட்டுத்தப்பட்டுள்ளது என தெரித்த ஜனாதிபதி அவர்கள், மண்டைதீவில் சர்வதேச துடுப்பாட்ட மைதான வேலைகளை விரைவுபடுத்துமாறு அரச அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரி மீசாலை வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்ற வீட்டுத் திட்ட மானியத்திற்கான காசோலைகள் வழங்கும் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும், யாழ்ப்பாண மாவட்டத்திற்கான உள்ளக விளையாட்டு அரங்கு மற்றும் சர்வதேச துடுப்பாட்ட மைதானத்தின் வேலைத் திட்டங்களை விரிவுபடுத்துமாறு அரசாங்க அதிபரை அதிமேதகு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


















